young man against case registered against for beating govt school teacher

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் இருந்து வெளியே வந்த அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் முருகேசன் (22) என்பவர் வகுப்பில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளை நோக்கித் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு விசிலடித்துக் அடாவடி செய்துள்ளார்.

Advertisment

இதனைப்பார்த்த ஆசிரியர் திருநாவுக்கரசு அந்த வாலிபரிடம் இதுகுறித்து கேட்கச் சென்ற போது, அந்த வாலிபர் ஆசிரியர் திருநாவுக்கரசு சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து உதைத்த முருகேசன், “உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்..” என்று கடுமையாக நடந்துகொண்டுள்ளார். கொல்லாமல் விடமாட்டேன் என்று கடுமையாக நடந்துகொண்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த தலைமை ஆசிரியர் கோவிந்தன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் மற்றும் மாணவர்கள் வாலிபர் முருகேசனை தடுத்துள்ளனர். பின்னர் முருகேசன் அவர்களும் கொலை மிரட்டல் விடுத்து பள்ளியில் இருந்து வெளியேறியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேலும் இரண்டு வாலிபர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

தகவல் அறிந்து ஆலங்குடி போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை யெ்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கோவிந்தன் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மற்றும் இருவர் மீது ஆசிரியரை தாக்குதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

young man against case registered against for beating govt school teacher

இந்த சம்பவத்தையடுத்து மாணவிகளின் பெற்றோர்களும் அச்சமடைந்திருந்த நிலையில் பள்ளியில் நடந்த இந்தவிரும்பத்தகாதசம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா விளக்கம் கேட்டிருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவின் பேரில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்( பொ) ஜெயந்தி பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளார்.

Advertisment

பள்ளியில் கல்வி அதிகாரி விசாரனை நடப்பது அறிந்து கிராமத்தினர் பலரும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களும் பள்ளியில் கூடியிருந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.