திருமணத்திற்காக தாய் கடன் வாங்கியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வசிப்பவர் சந்திரன். அவரது மனைவி மோகனா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சத்யா(21) என்ற மகளும், பிரவீன்குமார்(18) என்ற மகனும் உள்ளார். சத்யாவின் தந்தை சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்பு மோகனா தனது மகன், மகளோடு கோயம்பத்தூரில் குடியேறினார். அங்கு குடும்ப வறுமையை போக்குவதற்காக விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார் மோகனா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/589_0.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையில் சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். திருமணம் நடத்துவதற்காக சத்யாவின் தாயார் மோகனா கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு நிறைய கடன் இருக்கும் சூழலில் தற்போது தனது திருமணத்திற்கும் எதற்காக மேலும் கடன் வாங்குகிறீர்கள் என சத்யா தாயார் மோகனாவை திட்டியுள்ளார். இதனால் தாய் மோகனாவுக்கும், மகள் சந்தியாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தியா தாயுடன் சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சந்தியா வீட்டிற்கு வராததால் அவரது தாய் பதற்றம் அடைந்துள்ளார். பின்பு சந்தியாவை தேடி வந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதன்பிறகு, வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடப்பதாக கூறியுள்ளனர். பின்பு பதறிப்போய் அங்கு சென்று மோகனா பார்த்துள்ளார். கிணற்றில் விழுந்து சத்யா இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். பிறகு இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சத்யாவின் உடலை மீட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது உண்மையிலேயே தற்கொலையா? இல்லை, வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)