எத்தனை பேர் தான் வந்து பொண்ணு பார்ப்பீங்க... இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு...பதற வைத்த காரணம்!

திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளம் எனும் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி பாஸ்கர். இவருடைய மகளின் பெயர் கிறிஸ்டி. இவருக்கு வயது 26. கிறிஸ்டிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் கிறிஸ்டிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்டியை பொண்ணு பார்க்க நிறைய பேர் பார்த்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. எந்த மாப்பிள்ளையும் அமையவில்லை என்று கூறுகின்றனர். இதனால் திருமண பேச்சுவார்த்தைகள் தள்ளி போகியுள்ளது.

incident

இதனால் விரக்தியின் மனவேதனை அடைந்த கிறிஸ்டி நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிறிஸ்டி தூக்கில் தொங்குவதை கண்டு அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். பின்பு கிறிஸ்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவமானது ஆழ்வார்க்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் தள்ளி போனதால் இந்த முடிவு எடுத்தாரா இல்லை வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

complaint issues marriage parents Young woman
இதையும் படியுங்கள்
Subscribe