/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vao-mrd.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நன்னாவரம் கிராம நிர்வாக அலுவலராக வருவாய்த்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ராம்குமார் தனது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை ஈஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி ஈஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்த நிலையில், திருமணமாகி 3 மாதங்கள் ஆகியும் தனது கணவர் ராம்குமார் அழைக்காததால், நேற்று (13.12.2021) ஈஸ்வரி ராம்குமாரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ராம்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஈஸ்வரியை வீட்டைவிட்டு வெளியே தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டனர். தொடர்ந்து ஈஸ்வரி ராம்குமார் வீட்டின் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vao-mrd-inci.jpg)
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஈஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ராம்குமாரை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
Follow Us