Skip to main content

காதலனை தேடி இந்தியா முழுக்க சுற்றிய இளம் பெண்... சேலத்தில் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்...!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

பங்களாதேசத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ரீபா (எ) ராணி(25). இந்த பெண் சிறுவயதிலேயே தன்னுடைய குடும்பத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கயுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்த ரீபா, ஒரு நபரை முழுமையாக நம்பி காதலித்துள்ளார். காதலன் வாழ்நாள் முழுவதும் தனக்கு துணையாக இருப்பான் என்று நம்பி, தன்னை அவனிடம் இழந்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிய நிலையில், காதலன் இந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

 

Young girl-Recovery-Salem Police

 



கை குழந்தையோடு தன் காதலனை தேடி அழைந்த ரீபா,  ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, சில மர்ம நபர்கள் இவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது கைகலப்பாக மாறி, இதில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ரீபா தனது காதலனை இந்தியாவின் பல இடங்களில் தேடியுள்ளார்.

இறுதியாக சேலம் வந்த ரீபா, கரூப்பூரில் இரவு நேரத்தில் தனது கணவனை தேடி அழைந்து கொண்டிருந்த போது, காவல்துறையினர் மீட்டு போதிமரம் ஆதரவற்ற பெண்கள் நல மையத்தில் சேர்த்துள்ளனர். இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்து தவிக்கும் இந்த பெண் குறித்த செய்தி  கரூப்பூர் பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான 4வது நாளில் இளம்பெண் மர்ம மரணம்; ஆணவக் கொலையா? - போலீசார் விசாரணை

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
the police investigated Young girl issue for  marriage

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சமாதானம் ஆனதாகக் கூறி ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 ஆம் தேதி ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஐஸ்வர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி சடலத்தை எரித்துள்ளனர்.

இந்த விஷயம் தற்போது தெரியவர பூவாலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கணவர் நவீன் அளித்த புகாரின் பேரில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆணவக் கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்; உ.பியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

young girl passed away in Uttar Pradesh

 

யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே உத்தரப்பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஓரிரு நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

 

கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவாக இருந்த ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த இரு கொலைகளின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் எய்ட் நகரத்தில் வசித்து வந்த ரோஷினி அஹிர்வர் அங்கே இருக்கும் ராம் லகான் படேல் மகாவித்யாலயா என்ற கல்லூரியில்  பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை இருசக்கர வாகனத்தில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பட்டப்பகலில் சரமாரியாகச் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே ரோஷினி உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக ரோஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் ரோஷினியை காதலித்து வந்துள்ளதாகவும், ஆனால் ரோஷினி அவரின் காதலை ஏற்கவில்லை என்றதால் அந்த இளைஞர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதும் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜ் அஹிர்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.