young girl passed away was rescued in Coimbatore

Advertisment

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மேகலப்பிரியா. 26 வயதான இவர்,கடந்த ஓராண்டாகசொந்த ஊரை விட்டுகோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோபெர்க் டயாக்னோசிஸ் சென்டரில் லேப் டெக்னீசியனாகபணியாற்றி வந்துள்ளார்.

கோவைக்கு வந்த மேகலப்பிரியா, ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று மேகலப்பிரியா பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும்மேகலப்பிரியாவின் அறைக்கதவும் திறக்கப்படாததால்அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்துஜன்னல் வழியே பார்த்தபோது,மேகலப்பிரியா நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குதகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரத்தினபுரி காவல்நிலையப் போலீசார்மேகலப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, மேகலப்பிரியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவைக்கு வந்த பெற்றோர் உயிரிழந்த பெண்ணின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்த மேகலப்ரியாகாதல் பிரச்சனை காரணமாகத்தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.