young girl passed away near Gummidipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள மைதானத்தில் உடலில் காயங்களுடன் ஆடைகள் களையப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு போலீசார் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்து கிடந்த பெண் யார் ? யாரேனும் ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பின் கொலை செய்தனரா? போன்றபல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

உடலில் காயங்களுடன் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.