Young girl Lost their live after being hit by a mini bus; CCTV footage is shocking

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மினிபஸ் மோதி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனதுதந்தைக்கு உணவு கொடுப்பதற்காகதென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மூன்று பேர் ஸ்கூட்டி வாகனத்தில் சென்ற நிலையில் அப்பொழுது பின்புறமாக வந்த மினிபஸ் ஒன்று ஸ்கூட்டியில் மோதியது.

Advertisment

இந்த விபத்தில் சலோ ரம்யா சம்பவ இடத்திலேயே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி மினிபஸ் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். தற்பொழுது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.