Advertisment

காதலன் திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!

young girl  lost their life because her boyfriend scolded her

Advertisment

மணலி புதுநீர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சுவாதி. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சுவாதிக்கு தன்னுடன் வேலை பார்த்த தீபக் ராஜனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்குச் சுவாதிக்கு துணி எடுக்க வேண்டும் என்பதற்காக தீபக் ராஜ் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் துணிக்கடைக்கு வரச்சொல்லியுள்ளார். ஆனால் அங்கு சுவாதி வர தாமதமானதால், தீபக் ராஜ் கடுமையாக அவரை திட்டிவிட்டு அங்கிருந்து துணி எடுக்காமல் உடனே கிளம்பியுள்ளார். இதனால் சுவாதி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் சுவாதியை அவரது பெற்றோர் சமாதனம் படுத்தியுள்ளனர். இருந்தாலும் மனமுடைந்த சுவாதி இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, சுவாதி தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுவாதியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர் திட்டியதற்காகப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

boyfriend police woman
இதையும் படியுங்கள்
Subscribe