Advertisment

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா... எனக்காக நீ பெண்ணாக மாற வேண்டும்... நடந்த அதிர்ச்சி சம்பவம்!  

நண்பனை திருமணம் செய்து கொள்வதற்காக பெண்ணாக மாறவேண்டும் என்று கூறிவிட்டு ஏமாற்றிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெண்ணாக மாறிய திருநங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் அதே வகுப்பில் பயின்று வந்த அபிஷேக் என்ற மாணவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

incident

அப்போது சந்தோஷ், அபிஷேக் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர். அந்த சமயத்தில் அபிஷேக்கின் நடை உடை பாவனையில் பெண் போல் இருப்பதை அறிந்த சந்தோஷிற்கு அவர் மீது ஈர்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் நட்பையும் கடந்து காதலாக மாறியுள்ளது. பின்னர் கல்லூரி படிப்பு முடிவடைந்தவுடன் அபிஷேக்கை பிரிய மறுத்த சந்தோஷ் அவருடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என முடிவெடுத்து சந்தோஷ் அபிஷேக்கை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அபிஷேக் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் பெற்றோர்களை நான் தான் பார்த்து கொள்ள வேண்டும் எனக்கூறி புறக்கணித்துள்ளார்.

பின்னர் சந்தோஷ் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.அதன் பின்பு அபிஷேக் சந்தோஷுடன் வாழ திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே அபிஷேக் வந்துள்ளார். அப்போது சந்தோஷ் நீ பெண்ணாக மாற வேண்டும் என்று அபிஷேக்கிடம் கூறியுள்ளார். பின்னர் அபிஷேக் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியது மட்டுமில்லாமல் தன் பெயரையும் அர்ச்சனா என மாற்றிக்கொண்டுள்ளார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர்.ஆனால் திருமணம் செய்த சில நாட்களில் அபிஷேக்கை சந்தோஷ் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

Advertisment

பின்னர் உன்னுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அபிஷேக் என்கிற அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.இதனால் அதிருப்தி அடைந்த அபிஷேக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் சந்தோஷ் காதலை நம்பி அவனுக்ககாக பெண்ணாக மாறி திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் திருமணம் நடந்த பிறகு சந்தோஷ் என்னை அடித்து துன்புறுத்தியது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். பின்னர் திருநங்கைகள் சங்கத்திடம் அர்ச்சனா என்ற அபிஷேக் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation complaint police Female Friend
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe