Advertisment

‘திருப்பூர் டூ கள்ளக்குறிச்சி’ - குழந்தை கடத்தல் சம்பவத்தில் இளம்பெண் கைது 

Young girl arrested in child kidnapping case

சென்னைகோடம்பாக்கம்பகுதியைச் சேர்ந்தவிஜய் என்பவர் மனைவி உமா(25). இவர்திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம்கல்வராயன்மலைப்பகுதியில் உள்ளபரங்கிநத்தம்கிராமத்தைச்சேர்ந்தராணி(29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிநெருக்கமாகப்பழகி வந்துள்ளனர்.

Advertisment

இதனிடையே ஒடிசாமாநிலத்தைச்சேர்ந்தஅர்ஜுன்குமார் மற்றும் அவரது மனைவி கமலின் இருவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.கர்ப்பிணியான கமலின்பிரசவத்திற்காகத்திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ராணியுடன் ஏற்பட்ட பழக்கத்தால்மருத்துவமனையிலிருந்தகமலினுக்கு உதவியாக இருந்துள்ளார் உமா. அந்த சமயத்தில், உமா,கமலின்குழந்தையை ஒரு பையில் வைத்து யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

இந்த நேரத்தில் ராணிக்குஃபோன்செய்த உமா,உன்னைசந்திக்கபரங்கிநத்தம்கிராமத்திற்குவருவதாகத்தகவல் கொடுத்துள்ளார். அதன்படி நேற்றுபரங்கிநத்தம்கிராமத்திற்குகைக்குழந்தையுடன் வந்துள்ளார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராணிஉனக்குத்தான்குழந்தையே இல்லையே...யாருஇந்த குழந்தை என்று கேட்க, இது என்னுடைய குழந்தைதான் என்று உமாகூறியுள்ளார்.

இந்தநிலையில் காணாமல் போன குழந்தையின் பெற்றோர் திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்தபோலீசார் தீவிரமாகத்தேடி வந்தனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உமா இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். முதல் நாள்சென்னையிலிருந்தஉமா, மறுநாள்பரங்கிநத்தத்தில்இருந்ததைப் பார்த்த திருப்பூர்டிஎஸ்பிஅப்பன்துரைதலைமையிலானபோலீசார்உள்ளூர்போலீசாரின்உதவியுடன்பரங்கிநத்தத்திற்குவிரைந்தனர். அங்குஉமாவைகைது செய்து, அவரிடம் இருந்த குழந்தையைமீட்டுப்பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் திருப்பூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thirupur arrested police woman kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe