Advertisment

கல்லறை தோட்டத்தில் இளைஞர் சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Young corpse in cemetery garden; Shocked by the police investigation

நெல்லையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பேருந்து நிலையத்தின் அருகே வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள துதியில் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு நேற்று இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக அந்த பகுதியிலிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையில் உயிரிழந்தது நெல்லை கே.டி.சி நகரை சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. இவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்து ஹரி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருந்த ஜோஸ் செல்வராஜ் மது அருந்த கல்லறை தோட்டத்திற்கு வந்திருந்த நிலையில் எதிர் தரப்பினர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்து ஹரியின் அண்ணன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேருந்து நிலையத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

incident nellai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe