Advertisment

80 அடி ஆழ கிணற்றில் விழுந்து மாணவன் பலி! 

Young Boy passed away who fell in 80 feet well

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பி.கே.அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன், சித்ரா தம்பதியின் மகன் முபிஷேக்(16). இவர், பாடாலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பி.கே.அகரத்தில் உள்ள சுமார் 80 அடி ஆழ கிணற்றில் தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். உடனே அவருடன் இருந்த நண்பர்கள், முபிஷேக்கின் பெற்றோர் மற்றும் ஊர்மக்களிடம் தகவல் அளித்தனர். பின்னர் இதுகுறித்து புள்ளம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கிணற்றில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் மாணவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 2வது நாளில் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தேடியும் மாணவனை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மோட்டார் மூலம் தண்ணீரைவெளியேற்றினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும், பொதுமக்களும் மாணவணின் உடலை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் சடலமாக தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது. பின்னர் உடலை சிறுகனூர் போலீசாரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe