காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு என்ற 22 வயது இளைஞர் ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்தார். இதே போல் கேரளாவிலிருந்து வந்த கரிஷ்மா என்ற 21 வயது இளம்பெண் மற்றொரு கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக ஆரம்பத்தில் பழகி வந்துள்ளனர்.இந்த நட்பு நாளடைவில் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது பின்பு காதலாக மாறியுள்ளது. காதலித்த போது இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

Advertisment

lovers

இதனால் இவர்களுடைய காதல் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி விரக்தியில் ஆழ்ந்தனர். மேலும் இருவராலும் ஒன்றாக இணைந்து தான் வாழ முடியவில்லை, ஆனால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீதமான முடிவை எடுத்துள்ளனர். இதனால் மங்களூரு ரயில்வே நிலையத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்பு இருவரும் ஓட்டலில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழமுடியாது என்ற மனநிலையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்த ஹோட்டல் பணியாளர்கள் அவர்களை அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவமானது மங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.