Advertisment

விருதுநகரில் உயிரிழந்தநண்பனின் பெயரில் அவரது நண்பர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கடந்த ஆண்டு சரவணன் என்ற நபர் சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டார். முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணனுக்கு தலையில் பலத்த அடிபட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சரவணனின் முதலாமாண்டு நினைவு நாளில் அவரது நண்பர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

நண்பனின் மரணம் போல் இனி ஒன்று நிகழக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்களின் செயல்களுக்கு மக்கள் பாராட்டுகளைத்தெரிவித்து வருகின்றனர்.