Skip to main content

“மூட்டுவலி போக ஷூ அணிந்தாலே போதும்!” -புதிய கண்டுபிடிப்பெனச் சொல்கிறார் ஷேக் அப்துல்லா!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

‘மூட்டுவலியா? கவலையை விடுங்க.. இதோ தீர்வு!’ என்ற விளம்பரத்தை நம்மில் பார்க்காதவர்கள் / படிக்காதவர்கள் இருக்கமுடியாது. வலைத்தளங்களிலும், ‘மூட்டுவலி நொடியில் குணமாகிவிடும். இருக்கவே இருக்கிறது.. எருக்கம் இலை மருத்துவம்..’ என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளைப் பகிரச் சொல்லும் நட்புவட்டம் வேறு  நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை.

 

"You have to wear shoes to get rid of arthritis!" Sheikh Abdullah says new find!

 

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷேக் அப்துல்லாவும்   “இதுவும் மூட்டுவலிக்கான தீர்வுதான்..  காலுக்கு ஏற்ப பிரத்யேகமாக நான் தயாரித்து அளிக்கும் ஷூவை அணிந்தால் போதும்.. வலி இருக்குமிடம் தெரியாமல் பறந்துவிடும்.” என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.  

யார் இந்த ஷேக் அப்துல்லா?

ஸ்ரீவில்லிபுத்தூர் – கிருஷ்ணன்கோவில் – கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் & கம்யூனிகேஷன் துறையில் மூட்டுத் தேய்மானம் மற்றும் ஸ்டெம்செல் இமேஜிங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

‘முட்டுவலியை ஷூ எப்படி போக்கும்?’ என்ற நமது கேள்விக்கு விரிவாகவே விளக்கமளித்தார் ஷேக் அப்துல்லா -

 

"You have to wear shoes to get rid of arthritis!" Sheikh Abdullah says new find!


“2018-ம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 83.94 சதவீத மக்கள் மூட்டு தேய்மானத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. மூட்டுவலி பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம். பெரும்பாலும்,  40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த அவஸ்தை.

எலும்புகளுக்கிடையே பசைபோல் உள்ள Synovial Fluid குறையும்போது குறுத்தெலும்பில் தேய்மானம் உண்டாகிறது. இதனால்தான், மூட்டுவலி, மூட்டைச் சுற்றி வீக்கம், கால்களை நீட்டவும் மடக்கவும் முடியாதது, படியேற முடியாதது, உட்கார்ந்து எழ முடியாதது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜவ்வு தேய்ந்து இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசும்போது வலி ஏற்படுகிறது. தேய்மானத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுப்பழக்கம், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உடல் எடையைச் சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவையே மூட்டுவலிக்கான காரணங்கள் என்றாலும், நடைப்பயிற்சி முறையும் மிக முக்கிய காரணமாக மருத்துவத்துறையால் பார்க்கப்படுகிறது.  

 

"You have to wear shoes to get rid of arthritis!" Sheikh Abdullah says new find!


மூட்டு தேய்மானத்தைச் சரிசெய்வதற்கு உலகளவில் பல மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி,  சவூதி அரேபியா போன்ற நாடுகள் மூட்டுவலியிலிருந்து விடுபடுவதற்கான நிரந்தரத் தீர்வுக்காக இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மூட்டு தேய்மானத்தை நான் வேறு கோணத்தில் அணுகியபோது, முதலில் சாதாரண வலியால் அவதிப்படுபவர்கள், நாளடைவில் காலின் அமைப்பு மாறுதலால் (Valgus and Varus) அந்த வலி அதிகமாகி சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதனைச் சரிசெய்யும் முயற்சியில் ஆய்வினை மேற்கொண்டபோது HUMAN BODY KINEMATICS தந்துவங்களைப் படிக்க நேரிட்டது. மூன்று வருடங்களாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது, தேய்மானத்தால் மாறக்கூடிய அமைப்பைச் சரிசெய்யும் வழிமுறையைக் கண்டுபிடித்தேன்.

 

"You have to wear shoes to get rid of arthritis!" Sheikh Abdullah says new find!

 

KNEE BIO-MECHANICS என்ற அறிவியல் தத்துவத்தின்படி இயங்கக்கூடிய, எனது தயாரிப்பான ஷூவை அணிந்து நடக்கும்போது, இரண்டு எலும்புகளுக்கும் (FEMUR-TIBIA) உள்ள இடைவெளி அதிகரித்து தேய்மானத்தால் ஏற்படும் உராய்வு தடுத்து நிறுத்தப்படுவதால், உடனடியாக வலி குறையும். இந்தக் கண்டுபிடிப்பு,  சவூதி அரசாங்கத்திலுள்ள தபூக் பல்கலைக்கழக மருத்துவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.” என்றார் பெருமிதத்துடன்.  

மூட்டுவலி என்ற இம்சையிலிருந்து மக்களை விடுவிக்கக்கூடிய எந்த ஒரு கண்டுபிடிப்பும் வரவேற்கத்தக்கதே!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.