Advertisment

'சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள்;சீமான் ஆட்டத்தைப் பார்ப்பீர்கள்'-சீமான் பேட்டி

'You have seen Sivan's game, you will see Seeman's game' - Seeman interview

'சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள், 2026 தேர்தலில் சீமான் ஆட்டத்தைப் பார்ப்பீர்கள்'' என்று கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisment

2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார்.

Advertisment

கலந்தாய்வு கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் போது, பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள், சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள். நேர்மைக்கும் உண்மைக்கும் எந்த பக்கமும் பஞ்சம். அதனால் நான் தனித்து நிற்கின்றேன்.தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை விட மாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாங்கள் அல்ல. நீட் தேர்வை அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்துவது ஏன்? கூட்டணி சேர்ந்தால் தன்னுரிமை போய்விடும். இப்போது நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.

நியமன ஆளுநரைவிட மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு தான் அதிகாரம் அதிகம். மக்களாட்சி என்பது மக்களுக்கான அதிகாரம் ஆகும்'' என்றார்.

அதிமுகவை வலுக்கட்டாயமாக பா.ஜனதா கூட்டணிக்கு அழைத்தது உண்மையா? என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சீமான் கூறுகையில், 'வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்ந்தார்கள் என்பதை சொல்ல வேண்டியது அக்கட்சியின் பொதுச்செயலாளர் தான். எடப்பாடி பழனிசாமி, செய்தி

தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், தம்பிதுரை அவர்கள் யாரேனும் சொல்கிறார்களா?. அப்படி அவர்கள் சொன்னால் கூட்டணியில் சேர பாஜக கட்டாயப்படுத்தினர் என கூறலாம்'' என்றார்.

பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன் மேடையில் ஏறிப் பேசுவேன். நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை'' என்றார்.

naam tamilar politics seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe