Advertisment

“நீங்களே பார்த்திருப்பீர்கள் குண்டர்களை வைத்து தொண்டர்களை விரட்டியதை...” - அதிமுக குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்!

You have seen that opponents chased away the volunteers

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று (08.12.2021) சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அதிமுக அலுவலகத்தில் கேளிக் கூத்து... அதிமுகவைப் பொறுத்தவரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என்கிற நிலைதான். நீங்களே தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து விருப்ப மனு கொடுக்க வந்தபோது தொண்டர்களை விரட்டியதை. நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்சினையை திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.

Advertisment

உட்கட்சி கூச்சலை சரி செய்யவே அதிமுகவுக்கு சரியாக உள்ளது. இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது? உங்களுக்கும் சசிகலா அம்மையாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது? இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அரசியல் விமர்சகர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், சசிகலா ரஜினியை சந்தித்தது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து வந்தபோதே அவரிடம் கூறினேன். அதன் பின்பு தொலைபேசி வாயிலாக ரஜினியின் உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்தார்.

Advertisment

நேற்று நேரில் சென்று சந்தித்து விசாரித்து வந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழ்நாடு முதல்வர் வந்த உடனே நீட் தேர்வு ரத்து என்பதை ஒரே கையெழுத்தில் முடித்துவிடுவேன் என்று கூறினார். அதேபோல் சிறுபான்மையின மக்களின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு திமுக 7 பேர் விடுதலையில் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். திமுகவின் சுயரூபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திவருகின்றனர். ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் அவர்களை வேறு யாரும் இயக்குகிறார்களா? என்ற கேள்விக்கு காலம் அதனை உங்களுக்கு விளக்கும். எங்களுடைய இலக்கே அம்மாவுடைய கட்சியை மீட்டெடுப்பதே” என தெரிவித்தார்.

admk ammk trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe