Skip to main content

செய்தி வெளியிடாமல் இருக்க 15ஆயிரம் கொடுக்க வேண்டும்... மிரட்டியவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
The person who extorted money in the name of a journalist was handed over to the police station

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் மாவு மில் வைத்து நடத்திவரும் ஜெயராமன் என்பவரிடம் இன்று (25.06.2021) காலை அங்கு வந்த லாரன்ஸ் என்ற நபர், தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் பேசிய லாரன்ஸ், "உங்களுடைய மாவு மில்லில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்து ரகசியமாக அரைத்து தருவதாக புகார் வந்துள்ளது.

 

எனவே இதுகுறித்த செய்தியை வெளியிட உள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், செய்தி வெளியிடாமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஆனால் ஜெயராமன், "அரிசி இங்கு அரைத்து தரப்படுவதில்லை" என்று கூறியுள்ளார். ஆனால் லாரன்ஸ் தொடர்ச்சியாக அவரை தொந்தரவு செய்து பணத்தைக் கொடுக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

 

ஜெயராமன் தன்னுடைய நண்பர்களை செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார். லாரன்ஸ் என்ற நபரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால் ஜெயராமன் நண்பர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்