Advertisment

'உங்களுடைய பார்வையை நீங்கள் மாத்திக்கணும்''-வெற்றிமாறன் கருத்து குறித்து குஷ்பு

'You have to change your perspective' - Khushbu on Vetrimaaran's comment

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றிமாறனின் கருத்து குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''தன் மனதில் என்ன இருக்கிறதோ, உலகத்தை எந்த பார்வையில் பார்க்கிறீர்களோ உங்களுக்கு அப்படித்தான் தோணும். இன்று உலகம் உருண்டை என்று சொல்லும் பொழுது அது நமது எல்லோரின் பார்வை. இல்லை உலகம் உருண்டை கிடையாது சதுரம் என்று சொன்னால் அது அவர்களுக்கு அப்படி தான் தோணும். வெற்றிமாறன் சார் பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பவில்லை. உங்களுடைய பார்வையை நீங்கள் மாத்திக்கணும். எல்லாத்துலயும் ஒரு தப்பு கண்டுபிடிக்கணும், தவறு கண்டுபிடிக்கணும், நான் என்னுடைய பார்வையில், என்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன், உலகம் எப்படி இருக்கிறது என்று நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னால் அது அவருடைய துரதிஷ்டம் என்று சொல்வேன். உலகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் பார்க்க வேண்டும்'' என்றார்.

Chennai kushboo vetrimaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe