Skip to main content

இந்த ஒற்றை கேள்விக்கு பதிலுண்டா? -மெகா கூட்டணி குறித்து தமிழிசை!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருக்குலைந்த கூட்டணி என தமிழக பாஜக  தலைவர் தமிழசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.  

 

இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஒருங்கிணைந்த இந்தியா என்று பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டத்தில் பேசிய  திமுக தலைவர் ஸ்டாலின்,

 

இந்தியாவின் இரண்டுவது சுதந்திர போராட்டத்திற்காக இந்த பொதுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரின் சிந்தனையும், அதற்காகத்தான் இங்கு கூடியிருக்கிறோம். இந்த பேரணியின் நோக்கமும் அதுதான். எதிரியே இல்லை என கூறி வந்த மோடி அண்மையில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் ஒன்று சேர்ந்திருப்பதை பார்த்து நரேந்திர மோடி பயப்படுகிறார். அந்த பயத்தினால் ஏற்பட்ட கோபத்தால் அனைத்து எதிர்க் கட்சிகளையும் விமர்சிக்கிறார் மோடி என பேசியிருந்தார்.

 

Who is your Prime Ministerial candidate? you have a answer in this single question?

 

இதனையடுத்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்,

 

ஒருங்கிணைந்த இந்தியா என சொல்கிறார்கள். என்னைக்கேட்டால் உருக்குலைந்த கூட்டணி என சொல்வேன். உருப்பெற முடியாத கூட்டணி,கருவிலேயே கலைந்துபோகக்கூடிய கூட்டணி. அவ்வளவு பேர் மேடையில் உள்ளார்களே அவர்களிடம் யார் பிரதமர் வேட்பாளர் என்ற ஒரே ஒரு கேள்வியை கேளுங்கள். அதற்கு பதிலிருக்கிறதா? இந்த ஒற்றை கேள்விக்கு பதிலுள்ளதா என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“90% மக்களுக்கு பணத்தைப் பகிர்ந்தளிப்பேன்” - பிரதமருக்கு ராகுல் காந்தி அதிரடி பதில்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says I will distribute money to 90% people

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

Rahul Gandhi says I will distribute money to 90% people

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தைத் தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்தார்.

Rahul Gandhi says I will distribute money to 90% people

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீது தான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நான் கூறியதாக பிரதமரும், பா.ஜ.கவும் என்னை விமர்சிக்கிறார்கள். காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையைக் கண்டு பிரதமர் பயந்துவிட்டார். ஓ.பி.சி மற்றும் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஏழைகள் பட்டியலில் இருப்பார்கள். ஆனால் பணக்காரர்கள் பட்டியலில் அவர்களைக் காண முடியாது. ராமர் கோவில் மற்றும் பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் ஒரு பட்டியலினத்தவர், பழங்குடியினரை கூட பார்க்கவில்லை. 90% மக்கள் இதை புரிந்துகொள்கிறார்கள்.

யாருடைய பணம் ஊடகங்களுக்கு செல்கிறது? அரசு பணம் கொடுக்கிறது. ஜி.எஸ்.டியில் யாருடைய பணம் வருகிறது? இது 90 சதவீத மக்களின் பணம். நான் நீதித்துறையைப் பார்த்தேன். 650 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். ஆனால், 90 சதவீத மக்கள் 100 நீதிபதிகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். அது மிகச் சிறியவர்கள், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அடைவதற்குள் அது முடிந்துவிட்டது. 25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.