Advertisment

'அவரைப்போல் இனி எவரையும் பார்க்க முடியாது'- உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்

Rajinikanth

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 09.05.2024 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது.

Advertisment

நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'பத்ம விருதுகள் புத்தகத்தில் விஜயகாந்த் வரலாறு இடம்பெற்றது அவர் பெயருக்கு மேலும் பெருமை. விஜயகாந்தை போல் எவரையும் பார்க்க முடியாது. அவர் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Advertisment
rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe