
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகளைத் திறக்கும்போது எவ்வாறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதோ, அதேபோல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை பள்ளிகளைத் திறக்கும்போதும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்துநவம்பர் ஒன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களைக் காட்டி இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையைக் காட்டி இலவச பயணம் மேற்கொள்ளலாம் எனதமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Follow Us