Advertisment

‘முன்பணம் செலுத்தி பணியில் இணையலாம்...’ - மாயமான மோசடியில் ஈடுபட்ட இளைஞர்!

You can join the work by paying in advance

Advertisment

சேலம், ஐந்து ரோட்டைச் சேர்ந்தவர் முத்துகிரண் (31). இவர், மூன்று ரோட்டில் எல்.என்.டி. பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்துவதாக சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில், ‘பணியில் சேருவோருக்கு, மாதம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். விரும்புவோர், 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி பணியில் இணையலாம். கரோனா காலம் என்பதால், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணிபுரியலாம். எல்.என்.டி. நிறுவனம் செப். 30இல் மூன்று ரோட்டில் உள்ள அலுவலகத்தை திறந்து செயல்படுத்தும்’ என தெரிவித்தார்.

Advertisment

அதை நம்பிய சிலர் அவர்களது வங்கி கணக்கு, கூகுள்பே, போன்பே மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். அத்துடன், அவர் நியமித்த பெண்கள், வீடுகளுக்கே வந்து நேரிலும் பணம் வசூலித்துள்ளார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் பணம் செலுத்தினர். ஆனால், அவர் தெரிவித்தபடி அலுவலகம் திறக்கப்படவில்லை. அத்துடன் வாடகை தருவதாக உறுதியளித்து பயன்படுத்திவந்த புது காருடன் மாயமாகிவிட்டார். திட்டமிட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முத்துகிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முத்துகிரண் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, வேலை அளிப்பதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஐ.டி. நிறுவனத்தில் பணி வழங்குவதாக கூறி இளைஞர், இளம்பெண்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சேலம் காவல் ஆணையர் நஜ்முல் ஹாதாவிடம் 50க்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் புகார் மனு அளித்தனர்.

IT employee police Scam
இதையும் படியுங்கள்
Subscribe