Advertisment

“நீங்கள்தான் என் கடவுள், உங்களை பார்க்கவே வந்துள்ளேன்..” -  அமைச்சர் துரைமுருகன் 

You are my God, I have come to see you says Minister Duraimurugan

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சுமார் 10 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

Advertisment

அப்போது, “தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் 56 ஆண்டு இருந்தார். அதற்கு பிறகு நான் தான் 53 ஆண்டாக உள்ளேன். தொகுதியை நான் கோவிலாக பார்ப்பதால் மக்கள் என்னை வெற்றி பெற வைக்கிறார்கள். என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியை ஒப்பிட்டு பாருங்கள் நான் செய்த செயல்கள் தெரியும். எனக்குள்ள சீனியாரிட்டி, தலைவரிடத்தில் எனக்கு உள்ள நெருக்கம் காரணமாக இவற்றை செய்து வருகிறேன். இந்த டிவி, ரேடியோ காரங்க மழை வருது... மழை வருதுனு.. சொல்லிடுராங்க, முதல்வர் உடனே எங்களை ஆய்வுக்கு போகச் சொல்கிறார். இன்றும் எனக்கு பருவமழை தொடர்பாக ஆய்வு இருந்தது. ஆனாலும் உங்களை பார்க்கவே வந்துள்ளேன்” என்றார்.

Advertisment

பின்னர் அவர் அளித்த பேட்டியில், “ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்” எனப் பதிலளித்தார்.

Vellore duraimurgan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe