Skip to main content

“நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்” -ஆலோசனையில் ரஜினியிடம் நிர்வாகிகள் திட்டவட்டம்!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
jkl

 

 

ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடன் "தலைவர் கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்கத்தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார்" என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 

 

இதில், அரசியல் தொடர்பாகவும், கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ரஜினியிடம் பேசிய மூத்த நிர்வாகிகள், "முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் நம்மால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாதபடி ஆளும், ஆண்ட கட்சிகள் செய்து விடுவார்கள். எனவே வேறு ஒருவர் முதல்வர் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.