Skip to main content

சொந்த ஊரில் நடிகர் யோகிபாபுவின் திருமணம்: –ஊர்க்காரர்களுக்கே அழைப்பில்லையாம்...

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

 


தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட சிலப்படங்களில் நடித்துள்ளார். இவர் திடீரென தனக்கு திருமணமாகிவிட்டதுயென சமூகவளைத்தளம் வழியாக புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 


திருவண்ணாமலை மாவட்டம், பட்டு நகரான ஆரணிக்கு அருகில் பெரணமல்லூர் அருகில் உள்ள வாழைப்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நகரம்பேர் கிராமத்தை சேர்ந்தவர் யோகிபாபு. இவரது அம்மா தனது மூத்த மகனுடன் கிராமத்தில் தான் உள்ளார். இவரது உடன்பிறந்த அண்ணன் ராஜா குறிச்சொல்லும் சாமியாராக கிராமத்திலேயே உள்ளார்.

 

yogi babu marriage




இந்நிலையில் பிப்ரவரி 4ந் தேதி சென்னையை சேர்ந்த தனது தோழியும், காதலியுமான மருத்துவர் மஞ்சு பார்கவியுடன் காரில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். கிராமத்துக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தனது குடும்பத்தாரிடம் திருமண ஏற்பாடுகளை செய்யச்சொல்லியுள்ளார்.
 


இதனால் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலான மாரியம்மன் கோயிலில் திருமண ஏற்பாடுகளை வெகு சிம்பளாக ஏற்பாடு செய்துள்ளனர். பிப்ரவரி மஞ்சு பார்கவி குடும்பத்தினரை ஆரணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளார். பிப்ரவரி 5ந்தேதி காலை தனது கிராமத்து நண்பர்கள், குடும்பத்தினர், தன்னுடன் சென்னையில் உள்ள சில நண்பர்கள் முன்னிலையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி தாலிக்கட்டியுள்ளார். கோயிலை மணமக்கள் வலம் வந்துள்ளனர். கிராமத்தில் உள்ளவர்களுக்கு இந்த திருமணம் குறித்து பெரியதாக கூறவில்லை.


 


திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரியவந்து ஆரணி நகரில் உள்ள செய்தியாளர்கள் அவசரமாக அங்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றபோது, யோகிபாபுவின் உத்தரவின் பேரில் அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும் யோகிபாபுவின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பி வந்துள்ளனர். கோயிலில் திருமணம் முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு மனைவியுடன் வந்து நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார், குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். திருமணம் முடிந்ததும் உடனடியாக தனது மனைவியுடன் கார் மூலமாக சென்னைக்கு சென்றுவிட்டார்.
 

 

தங்கள் ஊரில் தங்களுக்கு தெரியாமல் ஒரு பிரபலத்தின் திருமணம் நடந்துள்ளதே என ஆச்சர்யமும், அதிசயமுமாய் பேசிக்கொண்டுள்ளனர் அக்கிராமத்தினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.