மதுரை முருகர் மாநாடு; யூ-டர்ன் அடித்த யோகி ஆதித்யநாத்!

 Yogi Adityanath didnot attend Madurai Murugan Conference

மதுரை மாவட்டம் பாண்டி கோயில் என்ற இடத்தில் இந்து முன்னணி சார்பில் நாளை (22-06-25) முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. அதன்படி, இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் முறையான பாஸ் பெற்றிருக்க வேண்டும், ஆன்மீக மாநாட்டில் அரசியல் நோக்கத்தில் செயல்படக் கூடாது உள்ளிட்ட 52 நிபந்தனைகளை காவல்துறை விதித்து அனுமதி வழங்கியது.

இதனிடையே மாநாட்டிற்காக ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதன் பின்பகுதியில் 8 லட்சம் சதுர அடிபரப்பளவில் மேடை, இருக்கை வசதிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மதுரை முருகர் மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நாளை (22-06-25) காலை மதுரைக்கு வருகை தரவுள்ளார்.

madurai YOGI ADITYANATH murugan manadu
இதையும் படியுங்கள்
Subscribe