திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் யோகா நிகழ்ச்சி! 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. அதன் காரணமாக இன்று, உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.திருச்சியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இன்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் அதன் இயக்குநர் அகிலா மற்றும் டீன் அகிலா மற்றும் டீன்கள் குமரேசன், சுப்பையன் உள்ளிட்ட கல்லூரி அலுவலர்கள் மாணவ மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

trichy yoga
இதையும் படியுங்கள்
Subscribe