சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9 ஆவது ஆண்டு சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

பல்வேறு முக்கியத்தலைவர்களும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில்கலந்து கொண்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதிஇரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாக்கூர் போன்றோர் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Advertisment

அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தினத்தினை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவியுடன் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் யோகா செய்தார்.