'நேற்று மோதல்; இன்று சமரசம்'-சந்திப்பு குறித்து விளக்கமளித்த அன்புமணி

'Yesterday's conflict; Anbumani explained about today's reconciliation meeting

புதுச்சேரி மாநிலம் வானூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளையும் ராமதாஸ் வழங்கினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், பாமக கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமன் என்பவரை நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால், ராமதாஸ் அந்த அறிவிப்பை அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு? என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். நான் சொல்வதுதான் நடக்க வேண்டும். பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் முகுந்தன் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார்” என்று கோபமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி, “எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு தொலைப்பேசி எண்ணையும் அறிவித்தார்.

''நீ இன்னொரு அலுவலகம் திறந்துக்கோ, நடத்திக்கோ. முகுந்தன் உனக்கு உதவியா இருக்க போறாரு. எனவே இதை யாரும் மாற்ற முடியாது'' என ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார். முகுந்தன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனும், அன்புமணியின் மருமகனும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புமணிக்கும் ராமதாஸுக்கு ஒரே மேடையில் ஏற்பட்ட இந்த கருத்து மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

'Yesterday's conflict; Anbumani explained about today's reconciliation meeting

இந்த நிகழ்விற்குப் பிறகு இன்று பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்ற நிலையில் பனையூரில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு மேற்கொள்ள தைலாபுரத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்புக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்தோம். வர இருக்கின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் எங்களுடைய செயல் திட்டங்கள்; அடுக்கடுக்கான போராட்டங்கள்; மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எங்களுடைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து பேசினோம். சாதிவாரி கணக்கெடுப்பு, 10.5 இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசினோம். கட்சியின் வளர்ச்சி பற்றியும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பற்றியும் சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றியும், அது சம்பந்தமான போராட்டங்கள், விவசாய மாநாட்டுக்கு பிறகு அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள் என்றெல்லாம் இன்று குழுவாக விவாதித்தோம்'' என சந்திப்பு குறித்து விளக்கம் கொடுத்தார்.

pmk politics Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe