Advertisment

நேற்று ட்விட்டரில்; இன்று சுவற்றில்; டிரண்டாகும் ஆளுநர்! 

தமிழ்நாடு சட்டப்பேரவையில்இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது. இதனையடுத்து நேற்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ‘#GetOutRavi’ என்பது டிரண்ட் ஆனது. இந்நிலையில், இன்று திமுக மேற்கு சென்னை மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ட்விட்டரில் ‘#GetOutravi’ டிரண்ட் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஜெமினி பாலம் அருகே செம்மொழி பூங்கா சுவரில் பேனர் வைத்துள்ளார். இது மேலும், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

mk stalin RN RAVI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe