YESTERDAY TASMAC SALES RS 243 CRORES

Advertisment

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று (29/08/2020) மட்டும் ரூபாய் 243.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 52.50 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 49.75 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதேபோல், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 48.26 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 47.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 45.23 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், நேற்று மட்டும் ரூபாய் 243.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.