நடிகர் அஜீத் நடித்து ரிலீஸ் ஆன கடைசி படம் விஸ்வாசம் இந்த படம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.இந்த நிலையில் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கி அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது. அப்போது அஜித் ரசிகர் ஒருவர் நேர்கொண்ட பார்வை ட்ரைலரில் அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் கையில் சூடம் ஏற்றி அஜித்திற்கு காட்டியுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisment
Advertisment