கடந்த மே 7-ஆம் தேதி தமிழகத்தில் அரசு உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டநிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மே 8 ஆம் தேதி மதுக்கடைகள்மீண்டும் மூடப்பட்டது. ஆனால் தமிழக அரசின் மேல்முறையீட்டை அடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று மீண்டும்தமிழகத்தில், சென்னை, திருவள்ளூரில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் நேற்று மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.மதுரை மண்டலத்தில் 44.7 கோடியும்,சேலம் மண்டலத்தில் 41.07கோடியும், திருச்சியில் 40.5கோடியும், கோவையில் 33.05 கோடிக்கும்மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.