Skip to main content

மஞ்சள் நோட்டிஸ் கொடுக்கும் திருச்சி முக்கிய புள்ளி

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

திருச்சியில் காவிரியில் மணல் எடுத்து கப்பம் கட்டுவதன் மூலம் அறிமுகமான சசிகலா, திவாகரன் மற்றும் இவர்கள் மூலம் தற்போது தமிழகத்தில் உள்ள முக்கிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரின் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக குறுக்கு வழியில் பல தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது அவை எல்லாம் நஷ்டம் ஆகிறது என்று திவால் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் திருச்சியை சேர்ந்த முக்கிய புள்ளி . இவரை பற்றி நாம் ஏற்கனவே நக்கீரனில் விரிவாக எழுதியிருக்கிறோம். 

 

மதுரை ஏர்போட்டில் 10.05.2018 திருச்சியை சேர்ந்த பேராசிரியர் அ.தி.மு.க. புள்ளி சிராஜீதீன் என்பவர் மத்திய குற்றபிரிவு போலீசால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம் சிராஜீதீன் என்பவர் சென்னையில் Tsn ecotech international Pvt எனக்கிற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறார். இந்த நிறுவனத்தின் 99.80 பங்குகளை இவரே வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு திருச்சியிலும், சென்னையிலும், சில சொத்துகளை காண்பித்து இந்த கம்பெனி பெயரில் உள்ள வங்கி கடன் 10 கோடி மற்றும் தனியார் கடன் 15 கோடி என வாங்கியிருக்கிறார். இதில் இந்த நிறுவனத்திற்காக வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால்தான் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
 

சிறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் சிராஜீதீன் நிறுவனம் நஷ்டம் அடைந்து விட்டது என்று This order issued from NCLT (NATIONAL COMPANY LAW TRIBUNAL) அனுமதி வாங்கியிருக்கிறார்.
 

இவர் வங்கியில் வைத்திருக்கும் சொத்துகளே ஏற்கனவே மூன்று நான்கு பேரிடம் கடன் வாங்கின சொத்துகளை தான் தற்போது கடன்களாக காண்பித்து அதன் பெயரில் திவால் நோட்டிஸ் என்கிற மஞ்சள் நோட்டிஸ் அனுப்புகிறார் என்கிறார்கள். இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்