மஞ்சள் அலர்ட்; அடித்து நொறுக்கும் கனமழை

nn

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் உருவான வளிமண்டல சுழற்சியானதுகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருந்தது. நேற்று காலை முதல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த நிலையில், நேற்று மாலை வேளையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் எனவும், நாளை மறுநாள் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா கடற்கரை அருகே செல்லக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe