yeddy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பெரும் சர்ச்சைகளுக்கிடையே 23வது கர்நாடகா முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். காலை 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆளுநர் விஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எடியூரப்பாவின் பதவியேற்பை அடுத்து பா.ஜ.க தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.