நூல் விலை மேலும் உயர்வு...கவலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்!

Yarn prices rise further ... Knitwear manufacturers worried!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்திருப்பதால், திருப்பூர் பின்னலாடைத் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 2020- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிலோ நூல் விலை 220 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு நூல் விலை 50% அளவிற்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்துக் கொடுக்கும் போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டது.

இதனால் பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள 11% வரியை நீக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் நேற்று (01/02/2022) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இது தொடர்பான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதனையடுத்து, அனைத்து தர நூல்களும் 10 ரூபாய் விலை உயர்ந்து, கிலோ 340 முதல் 390 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக, புதிதாக பெறும் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தும் பட்சத்தில் போட்டி நாடுகளான சீனா, வியட்னாம், கம்போடியா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களது ஆர்டர்களை மாற்றிக் கொடுக்கும் அபாயம் இருப்பதாகவும், ஆர்டர்களை இழக்க நேரிடும் என ஏற்றுமதி நிறுவனங்கள் கூறியுள்ளனர்.

அதேபோல், டெக்ஸ்டைல் தொழிலை நாடியுள்ள தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் இந்த நூல் விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது

price Tiruppur yarn
இதையும் படியுங்கள்
Subscribe