நாகை மாவட்டம்வைத்தீஸ்வரன்கோயிலில் கரோனா வைரஸைகட்டுப்படுத்தவும், விரைவில் கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் வேண்டி மிகப்பெரிய மித்ருஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமத்தை நடத்தியுள்ளனர் பாஜகவினர்.

Advertisment

 Yaham to control Corona in the Uttiswaran temple

நவக்கிரக ஸ்தலங்களுல் ஒன்றான வைத்தீஸ்வரன்கோயில், வைத்தியநாதசுவாமிக்கோயில் நோய் தீர்க்கும் ஸ்தலமானவும் நம்பப்படுகிறது. வைத்தியநாதசாமி, செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய நான்கு சாமிகள் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் தலமாக இருக்கிறது. இங்கு முறையாகவழிபாடு செய்தால் அனைத்து வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.

Advertisment

 Yaham to control Corona in the Uttiswaran temple

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 20 சிவாசாரியார்களை கொண்டு 5 வெள்ளி கடங்களில் புனித நீர் வைத்து சிறப்பு யாகம் பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. " ஹோம புகை மூட்டத்தால் கிருமி கட்டுப்படும்" என யாகத்தில் காஞ்சி சங்கர மட ஆஸ்தான பட்டர் தினகர சர்மா தெரிவித்தார்.

கரோனா வைரஸ்தாக்கம்பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிற நிலையில்பாஜகவினர் தங்கள் பங்கிற்குஹோமம்செய்துள்ளனர்.

Advertisment