சென்னையில், யாதவர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், யாதவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும், மேய்ச்சல் சமூக மேம்பாட்டு வாரியம் வேண்டும், தமிழ்நாட்டில் யாதவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள் அது நடக்காத வண்ணம் நடவடிக்கை வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.