கலைஞருக்கு புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் ஒய்.எஸ்.சவுத்ரி கலந்து கொண்டார்.
அப்போது அவர், கலைஞர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிரவாகி என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழுக்காக அரும்பணியாற்றியவர். தெலுங்கு மக்கள் மீது மிகந்த அக்கறை கொண்டவர் கலைஞர். கூடாநட்பு கேடாய் முடியும் என்பதும் கலைஞர் எப்போதும் கூறும் கருத்துரை. இலவச கல்வி, இலவச மின்சாரம் திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர் என்றார்.