மதுரை பி.பி.குளம் பகுதியில் பிறந்து ஒரு நாளே ஆனபச்சிளங்குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்தசம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தநிலையில் தற்பொழுது போலீசாரின்விசாரணை இது நரபலியா? என்பதை நோக்கித்திரும்பியுள்ளது.
நேற்று மதுரை பி.பி.குளம் உழவர் சந்தை பகுதியில் நாய் ஒன்றுபிறந்து ஒரே நாளான பச்சிளங்குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு வந்த நாயைத்துரத்திவிட்டுகுழந்தையின் தலையை மீட்டுள்ளார். அந்த இடத்திலேயே நின்று கண்காணித்துக் கொண்டேகாவல் நிலையத்திற்கு அந்த இளைஞர் தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குழந்தையின் தலை ஒரு அட்டைப் பெட்டியில் சேகரித்தபோலீசார் அதனைக்கொண்டு விசாரணை நடத்தினர்.
பிறந்த குழந்தையின் தலையை நாய் எடுத்துவந்த வந்த இந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,கைப்பற்றப்பட்ட குழந்தையின் தலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குழந்தையின் தலை சாக்கடையில் நனைந்ததைப்போல்இருந்ததால்தலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் குழந்தையின் உடலைத்தேடிவருகின்றனர். மேலும் தலை மட்டும்தனியாகத்துண்டிக்கப்பட்டிருப்பதால் இது நரபலியாகஇருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் தல்லாகுளம் போலீசார் விசாரணையைத்தொடங்கியுள்ளனர்.