
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு ரயில் மூலம் சென்றுள்ளார். அப்போது இவர் சீர்காழி அருகே வரும்போது இவரது உடல் அதிக அளவு வியர்த்துள்ளது நெஞ்சும் வலிஏற்பட்டுள்ளதாக ரயிலில் உள்ள உதவியாளர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து தகவல் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிதம்பரம் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அவரை பத்திரமாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழைத்துச் சென்று அனுமதித்தனர். தயாராக இருந்த மருத்துவ குழுவினர் இவரைபரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவருக்கு நெஞ்சு வலி இல்லை என்றும் பி பி அதிகமானதால் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். காலை 6 மணி வரை ஓய்வு எடுத்த பிறகு 7 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)