திருச்சி மாவட்டம், ஜீயபுரம் திருப்பஞ்சீலியைட் சேர்ந்தசரவணன் என்பவரின் 17 வயது மகள், திருப்பஞ்சீலியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி மாலை 7 மணியளவில் அருகில் உள்ள மூர்த்தி என்பவரின் கடையில் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவா், தன்னுடைய செல்போனில் பேசி கொண்டிருந்த நேரத்தில், மூர்த்தி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பரணிகுமார்(21) ஆகிய இருவரும் மாணிவியின் செல்போனை பறித்துவிட்டு அவரை உடல் அளவில் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளனா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஜீயபுரம் அனைத்து மகளிகாவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து மூர்த்தி மற்றும் பரணிகுமார் இருவரையும் போக்சோவில் காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.