சென்னை ஐ.சி.எப் அருகே அரசு பேருந்து ஒன்று சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்து 10 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை பிராட்வேயில் இருந்து கொரட்டூர் செல்லும் 35 என்றஎண் கொண்டு மாநகர பேருந்தானது இன்று காலை 11:30 மணிக்கு பிராட்வேயில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொரட்டூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஐசிஎப் பகுதி கம்பர் அரங்கம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது ஆட்டோ ஒன்று குறுக்கில் வந்ததால்பேருந்து ஓட்டுநர் தேவராஜ் விபத்தை தடுக்க பேருந்தை வளைத்துள்ளார். அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாலை தடுப்பின் மீது ஏறியது.இதில் பேருந்தின் முன் சக்கரங்கள் கழண்டன. இந்த விபத்தில் பத்துக்கு மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.