Advertisment

''நான் திமுக எம்.பி. தான்''-விசிகவை சேர்ந்த ரவிக்குமார் பதில்!

'' I am a DMK MP. Only '' - Ravikumar answers in court!

Advertisment

திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்துத்தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஒரு கட்சியைச் சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் நாடாளுமன்றத்தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிஉறுப்பினர் அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்துத்தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிரப் பொதுநல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கைத்தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டதாகப் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

highcourt ravikumar vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe