babbb

தவறான சிகிச்சையால் 18 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் தாயாருக்கு இழப்பீடு வழங்க மகள் அனுப்பிய கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கு பதிவு செய்தது.

Advertisment

குமரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள பொன்மனையை சோ்ந்தவர் கல்லூரி மாணவி ஆதா்ஷா. இவருடைய தாயார் சோபனா 18 ஆண்டுகளுக்கு முன் நிறைமாத கா்ப்பத்தோடு ஆதா்ஷாவை பெற்றேடுப்பதற்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

சுகமாக ஆதர்ஷா பிறந்தாலும் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சோபனா குழந்தை பிறந்த அன்றே கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையிலும் கணவரும் கைவிட்டதால் உறவினா்கள் உதவியுடன் ஆதர்ஷா வளா்க்கப்பட்டார். மேலும் தற்போது ஆதர்ஷாவும், தாயாரும் பெரும் கஷ்டத்தோடு வாழ்ந்து வருகின்றனர். தாயாரின் மருந்து செலவுக்கும் வழியில்லாமல் தவிக்கிறாள். தவறான சிகிட்சை அளித்த மருத்துவமனையும் எந்த உதவியும் செய்யவில்லை. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisment

இதனால் தாயாருக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தனது படிப்புக்கும் பணம் இல்லாமல் தவித்து வருவது குறித்து அதற்கு நடவடிக்கை எடுக்க 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆதா்ஷா மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.