Advertisment

நான்கு உயிர்களைப் பறித்த தவறான உறவு...

cc

ஒரு பெண், தான் பெற்ற குழந்தையைக் கொலைசெய்து, உடலை வேளாங்கண்ணியில் விடுதி அறையில் பூட்டிவிட்டு, இன்னொரு குழந்தை மற்றும் இன்னொருவருடன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டிருக்கிறாள்.

Advertisment

வேலூர் மாவட்டம் - கணியம்பாடி அருகிலுள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி. உறவினரான கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயந்திக்கும் தவறான உறவு இருந்திருக்கிறது. இருவரும், குழந்தைகள் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீலட்சுமியுடன் கடந்த 27-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு கிளம்பினர். இவர்கள் வீடு திரும்பவில்லை. வேளாங்கண்ணியில் விடுதி அறை ஒன்றில், குழந்தை மகாலட்சுமியைத் தலையனை வைத்து அழுத்திக் கொலை செய்து, அந்த அறையில் உடலை வைத்துப் பூட்டிவிட்டு, தலைமறைவானார்கள்.

Advertisment

அடுத்த சில நாட்களிலேயே அந்த உறவு கசந்து, எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை ஸ்ரீலட்சுமியோடு, ஜெயந்தியும், கோபாலகிருஷ்ணனும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து விசாரணை செய்தபோது, குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதால், ஆந்திராவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்திருக்கிறது.

கொலை, தற்கொலை என நான்கு உயிர்களைப் பலிகொண்டுவிட்டது ஜெயந்தியின் தவறான உறவு. மனைவி, குழந்தைகளை இழந்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தனிமரமாக நிற்கிறார் தனசேகர்!

suside
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe