writter udhayshankar yuva purashkar won award

Advertisment

எழுத்தாளர் உதயசங்கருக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு பாலசாகித்ய புராஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கம்எழுதிய ’திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.